fbpx
Others

அவிநாசி சாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ….?

avinashi-road-youturn-system-replaced-again-in-avinashi-road-to-reduce-the-trafficகோவை மாநகர காவல்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், ” அவிநாசி சாலையிலுள்ள எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்கள், 13.06.2026 ஆம் தேதி முதல் 17.06.2026 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இதனால் பயனீர் மில் சந்திப்பு டாமினோஸ் அருகில் உள்ள யூ டர்ன் தற்காலிகமாக மூடப்படுகிறது.இதில் போக்குவரத்து சிக்னல் செயல்பாடுகளின் தன்மை மற்றும் வாகன போக்குவரத்தையும் ஆய்வு செய்து, சிக்னல்களில் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா என்பதையும் ஆய்வு செய்து நிரந்தரமாக போக்குவரத்து சிக்னல்கள் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளால் பீளமேடு, காந்தி மாநகர், பாரதி காலனி செல்லும் வாகன ஓட்டிகள் பயனடைவார்கள். இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று கூறியிருந்தனர். காவல்துறை நினைத்தது ஒன்று, நடந்தது வேறு. போக்குவரத்து சிக்னல் காரணமாக அவிநாசி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. யூ டர்ன் இருந்தபோது கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. ஆனால் சிக்னல் முறை அமல்படுத்தியதால் எஸ்ஸோ பங்க், பயனீர் மில் சந்திப்புகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பீக் ஹவர்ஸ்களில் வாகனங்கள் நகர முடியாமல் திணறின.மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எஸ்ஸோ பங்க், பயனீர் மில் சந்திப்புகளில் சிக்னல் முறையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் கோரிக்கையை ஏற்று எஸ்ஸோ பங்க், பயனீர் மில் சந்திப்புகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து சிக்னல் நடைமுறைபடுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. சிக்னல் முறையை விட யூ டர்ன் முறை சிறந்தது என்று தெரியவருகிறது. அதனால் காவல் ஆணையர் உத்தரவுப்படி மீண்டும் யூ டர்ன் முறை அமல்படுத்தப்படுகிறது. அந்தப் பகுதியில் கள ஆய்வு செய்து போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொது மக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். அவிநாசி சாலையில் சிக்னல் நீக்கப்பட்டு, யூ டர்ன் முறை அமலுக்கு வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close