RETamil Newsதமிழ்நாடு
மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு
இன்று மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் ஆன்மா உடலைவிட்டு பிரிந்ததை அடுத்து அவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு மறுத்துள்ளது.
இதற்கான அரசாணையை தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ளார் . அதில் அவர் கூறியிருப்பது மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்க்கான பிரச்சனை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தினால் அங்கு இடம் ஒதுங்குவது இயலாத ஒன்று, இவ்வாறு கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக அண்ணா பல்கலைகழகத்திற்கு எதிராக உள்ள காந்தி மண்டபம் , ராஜாஜி மணிமண்டபம் , காமராஜர் மண்டபம் அருகில் உள்ள 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்குவதாக அதில் குறிப்பிட்டு உள்ளார் .