RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு உரை: ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ வட்டாரங்கள் கேட்டுக்கொண்டன.

இதனிடையே, ஏழை எளியோரின் வாழ்க்கை நிலைமை மோசமடைவதால் சில விலக்குகளை அளிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் நிலவி வருகிறது.

இது தொடர்பாக,

நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த உரையின்போது ஊரடங்கு நீட்டிப்பு பற்றியும் ஏழை மக்களின் வாழ்வாதரத்துக்கு வழி வகை கூறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close