fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

தமிழகத்தை தாக்குமா வெட்டுக்கிளிகள்..? வேளாண்துறை விளக்கம்!

Tamilnadu agricultural department announcement about locust

சென்னை:

வட மாநிலங்களை கதிகலங்க வைக்கும் வெட்டுக்கிளிகளால்  தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் படை மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மாநிலங்களை பாதித்துள்ளது.

அந்த மாநிலங்களில் உள்ள விளை நிலங்களில் இந்த வெட்டுக்கிளிகள் கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. கொரோனா இழப்பை சந்தித்துள்ள நிலையில் வெட்டுக்கிளி படையெடுப்பும் அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் படை தமிழகத்திற்கும் வந்து விடுமோ என்ற பயம் தமிழக விவசாயிகளிடமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக வேளாண் துறை வெட்டுக்கிளி படைகளால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை, ஆனாலும் முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று கூறியுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close