fbpx
Others

கவசம் அறக்கட்டளை சார்பில் இரண்டு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் மற்றும் கொடையாளர்கள் ஒன்றிணைந்து ஜனவரி 2023-இல் கவசம் அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் பல்வேறு குற்றங்கள், மற்றும் சாலை விபத்துகளால்பாதிக்கப்பட்டவர்களுக்குபல்வேறுஉதவிகளைவழங்கிவருகின்றனர்.        18-01-2025 அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர்களான ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான எஸ்.மலர்விழி மற்றும் சுகுணா குழுமத்தலைவர் வி.லட்சுமிநாராயணசாமி ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவணசுந்தர் ஐபிஎஸ் முன்னிலையில் 5 நபர்களுக்கு தையல் இயந்திரத்தையும், ஒரு நபருக்குப் பொருட்களுடன் கூடிய ஒரு பெட்டிக் கடையையும் வழங்கினர். நன்கொடைகளின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close