RETamil News
உய்ரநீதிமன்ற உத்தரவு ; மெரினாவில் தூய்மை பணிகள் முறையாக நடக்க மாநகராட்சி ஆணையர் நடை பயிற்சி செல்லலாம்

சென்னை மெரினாவில் மக்கள் தொகை அதிக அளவில் வருகை தருவதால் அங்கு அசுத்தம் அதிகரித்துள்ளது.எனவே அதை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மெரினாவில் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சென்னை மெரினாவில் சுத்தப்படுத்தும் பணிகள் முறையாக நடக்க காவல் ஆணையரும், மாநகராட்சி ஆணையரும் ஒரு மாதம் மெரினாவில் நடைப்பயிற்சி செல்ல சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.எனவே மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது குறித்த விவர அறிக்கையை ஜனவரி 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.















