fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

சீனாவுடனான லடாக் மோதல்…! ராஜ்நாத் அவசர ஆலோசனை!

Defence minister rajnath singh discussion

டெல்லி :

லடாக் மோதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

சீனா, இந்தியா ராணுவ மோதல் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் நேற்று ஆலோசனை நடந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர். தற்போதைய சூழல் குறித்தும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும் ராஜ்நாத் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக லடாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தளபதி எம் எம் நரவானே ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close