ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்…

ராணிப்பேட்டை மாவட்டம் பெரிய உப்புபேட்டையில் ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் டாக்டர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி. நந்தகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகனம்,
உப்புபேட்டை ஊராட்சி மன்ற தலைவரும், கிளை செயலாளருமான சுபா (எ) சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேருரை ஆற்றினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி, சத்தியநாதன், விஜயரங்கம், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்ரீநாத் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் கிளை கழகச் செயலாளர் சுப்பிரமணி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.