fbpx
GeneralRE

மலைவாழ் மக்களுக்கு உதவிய மருத்துவர் டெங்கு காய்ச்சலால் மரணம்

கோயம்புத்தூரை  பூர்வீகமாக கொண்ட இளம் மருத்துவர் ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளார்,


தற்போது இவரின் மரணம் பலபேரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்ட சிறுமுகையை சேர்ந்த எல்ஐசி ஏஜென்ட் வாசுதேவனின் மகன் ஜெயமோகன் அவருக்கு வயது 29 எம்பிபிஎஸ் முடித்துவிட்டு,

டெங்குமாரகாடா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை,கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் இவருக்கு கொரோனா பரிசோதனையும்  செய்யப்பட்டது.

பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு  வந்தால் இதற்கு டெங்கு சோதனை செய்யப்பட்டு  டெங்கு உறுதி செய்யப்பட்டது.

மருத்துவர் சிகிச்சை அழித்த நிலையில், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் டாக்டர் ஜெயமோகன்.

இதுகுறித்து அவரின் நண்பர்களிடம் கேட்கும் போது நல்ல மனிதர், பிளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் இரண்டாவது மதிப்பெண் பெற்று நல்லா படிக்கும் மாணவன்.
டாக்டர் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எம்பிபிஎஸ் முடித்தார். வெளிநாடு, தனியார் மருத்துவமனையில் வேலை புரியாமல், டெங்குமரக்காடா  என்ற மலை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றினார்.!

பரிசல் மூலம் தான் அந்த கிராமத்திற்கு போக முடியும், காலையில் சீக்கிரமாகவே கிளம்பி விடுவார், தன்னுடன் வேலை செய்பவர்களை மரியாதையோடு நடத்துவார்,

எல்லா மக்களிடமும் அன்பாகவும் நடந்து கொள்வதற்காக,

கொரோனா க்கு எதிரான பணியில் கூட சிறப்பாக உதவி செய்து வந்தார்,

சில நாட்களுக்கு முன்புதான் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் அறிந்தனர்,.

ஒரு உயிர் பிரிந்தது யாரும் எதிர்பார்க்கவில்லை, இது குறித்து மருத்துவரிடம் கேட்கும் போது மூன்று நாட்களுக்கு முன்பு தான் மருத்துவமனைக்கு வந்தார் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் வார்டில் நன்றாகத்தான் இருந்தார்.

கொரோனா ஆக இருக்கும் என்று  கொரோனா சோதனை செய்தோம் ஆனால் சோதனையில்   கொரோனா  நோய் இல்லை என்று உறுதியான பின் டெங்கு, பன்றி காய்ச்சல் ஆகிய சோதனைகளை செய்ததில் டெங்கு என்று உறுதி செய்யப்பட்டது.

உயிர்போகும் 6 மணிக்கு முன் மயக்கமடைந்தார் தண்ணீர் கேட்டார் கொடுத்தும் எந்த பதிலும் இல்லை இதயத் துடிப்பே நின்றுவிட்டது உடனே அதை சுவைக்கும் மாற்றி வென்டிலேட்டர் கொடுத்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் இழப்பு பலபேருக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இதனால் அவரின் தாய் தற்கொலைக்கு முயன்று அரசு மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதித்த தற்போது நலமாக உள்ளார்.

ஜெகன்மோகன் குறித்து உயிர்வழத்துறை துணை இயக்குனர், சுகாதாரப்பணி துணை இயக்குனர் பால்சாமி இடம்  கேட்ட போது கடந்த மூன்று ஆண்டுகளாகவே டெங்கு மாராகாடா  கிராமத்தில் பணியாற்றி வந்தார், கடந்த சில நாட்களாக  தான் காச்சலுக்காக விடுப்பு வேண்டும் என்று கேட்டிருந்தார்.

பின் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் உயிரிழப்பு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அனைவரிடமும்….

ஏழைகளுக்கு உதவிய ஒரு கரம் உயிரிழந்து விட்டது……

?V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close