fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

ஊரடங்கு முடிஞ்சாலும் சென்னையில் இதுக்கு மட்டும் தடை!ஒண்ணும் பண்ண முடியாது!

Tamilnadu police bans meeting, protest

சென்னை: சென்னையில் ஊரடங்கு முடிந்தாலும் கூட்டம் கூடுவது, போராட்டம் செய்வது போன்றவற்றிற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 3 கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் 4ம் கட்டமாக வித்தியாசமான ஊரடங்கு செயல்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சென்னையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூட்டம் கூடுதல், பேரணி, உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு தடை உள்ளது.

மே 17க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மேற்கண்ட போராட்டங்களுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  மே 28 வரை மேலும் 15 நாட்களுக்கு சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்திலும் இந்த தடை தொடர்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close