திருவாருர்–53 நார்த்தாங்குடி விவசாயிகளின் கோரிக்கை உடன் நடவடிக்கை..!
திருவாருர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 53 நார்த்தாங்குடி கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க தற்போது திருவாருர் மாவட்ட பெய்த கனமழையால் சம்பா தாளடி மழை நீரில் சூழ்ந்துள்ளது.. இந்த மழை நீர் வடிகால் இணைப்பு இல்லாமல் மழை நீர் வடியாமல் மழை நீர் தேங்கியது… இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் விவசாயிகள் கோரிக்கையேற்று அந்தப்பகுதியைவலங்கைமான்அய்யாவட்டாட்சியர் அவர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்,நில அளவையாளர்,வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில் இன்று வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது..வடிகால் வாய்க்கால் இணைப்பு சரி செய்து தந்த அய்யா வட்டாட்சியர் அவர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்,நில அளவையாளர்,வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர் அணைவருக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

