fbpx
Others

வாகன ஓட்டிகளால் தொல்லை, கண்டுகொள்ளாத ஆவின் பால் அதிகாரிகள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆவின் பால் மூவர்கள் நல சங்கம் சார்பில் ராணிப்பேட்டை சந்தைமேடு அருகே உள்ள வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இவ் ஆலோசனை கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார், செயலாளர் சங்கர் மாநிலத் துணைத் தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட பொருளாளர் மாதவன், ஆலோசகர் ஆற்காடு குமரவேல், சிப்காட் மேகநாதன், ஆற்காடு வினோத், சிவகுமார், ராஜசேகர், ராணிப்பேட்டை விக்னேஷ், வேப்பூர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்பொழுதுபால் முகவர்களுக்கு பால் பாக்கெட் களை ஏற்றி வந்து விநியோகம் செய்யும் வாகன ஓட்டுகளால் பல தொல்லைகள் அனுபவித்து வருவதாக பேச ஆரம்பித்தனர் தினமும் சரியான நேரத்தில் கடைக்கு அருகாமையில் வந்து பால் இறக்குவது கிடையாது கடை இருக்கும் இடத்திற்கும் வாகனம் நிற்கும் இடத்திற்கும் சுமார் 500 மீட்டர் தொலைவில் பால் இறக்குகின்றனர் இதனால் கடைக்கு பால் எடுத்துச் செல்வதற்கு சிரமமாக உள்ளது
என்கிறனர்மேலும் கூடுதலாக பால் பால் பாக்கெட் பதிவு செய்தால் காலையில் கொடுக்க வேண்டியதை மாலையிலும் மாலையில் கொடுக்க வேண்டியதை மறுநாள் காலையிலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று வாக்குவாதம் செய்து மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசுகின்றனர் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள் என்கின்றனர் தற்போது 407 வாகனத்தில் தான் பால் பாக்கெட் இறக்குமதி செய்யப்படுகின்றன கூடுதலாக பால் பாக்கெட்டைகளை பதிவு செய்யும்போது அதனை ஏற்றி வந்து முகவர்களுக்கு கொடுப்பதற்கு கண்டெய்னர் வாகனங்கள் ஏற்பாடு செய்தால் மட்டுமே பால் வினியோகம் சீரான முறையில் நடைபெறும்.மேலும் வாகனத்தில் இருந்து பால் பாக்கெட்டுகள் இறக்கும் போது ஓட்டை பாக்கெட்டுகளை அதிகமாக இறக்கின்றனர் இதனால் நஷ்டம் ஏற்படுகிறது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுமைக்கும் வாகன ஓபன் ஒரே தரப்பினருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக கேள்விப்படுகிறோம் இந்த ஒப்பந்தம் குறித்து மாற்று தனி நபருக்கும் வழங்க வேண்டும் இக்குறைகளை எல்லாம் துறை சார்ந்த அதிகாரிகள் சரி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் காலதாமதம் ஆகும் பட்சத்தில் பால் கட்டணம் கட்டுவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோமென தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close