fbpx
Others

மோடி அரசாங்கம்மீதுஅடுக்கடுக்கானகுற்றச்சாட்டுகளை முன்வைத்தார்—கார்கே

எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்கக்கூடாது என மோடி அரசு முடிவு செய்துவிட்டது - மல்லிகார்ஜூன கார்கேமாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேமோடிஅரசாங்கம்மீதுஅடுக்கடுக்கானகுற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவையில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காதது குறித்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, “எதிர்க்கட்சித் தலைவர்களை பேச அனுமதிக்கககூடாது என்று மோடி அரசாங்கம் முடிவு செய்துவிட்டது. மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி, இருஅவையிலும் பேச அனுமதிப்பதில்லை.””இந்த நாட்டிற்காக தியாகம் செய்த,  போராடிய, சிறை சென்று நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய நமதுமாபெரும் தலைவர்களுக்கு எதிராக, ஒரு மனிதர் அவையில் பேசுகிறார். அவருக்கு மைக் கொடுக்கப்படுகிறது, அவர் அந்த மைக்கில் இஷ்டம்போல் அவதூறுகளை பொழிகிறார்,அரசாங்கமோ மௌனமாக இருக்கிறது. இதை பாஜக எப்போதாவது கண்டித்திருக்கிறதா?” “அதனால்தான், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், எங்களை பேச அனுமதிக்கவில்லைஎன்றால், நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டும், நாங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, நமதுதலைவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை, நாங்கள் கண்டிக்கிறோம்,” என்றார்.

Related Articles

Back to top button
Close
Close