ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் கோ பேக் மோடி!!

விஜயவாடா:
பிரதமர் மோடி செல்லும் இடம் எல்லாம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜயவாடாவில் எங்கு பார்த்தாலும் ‘மோடி நோ என்ட்ரி’ என்ற வாசகம் பேனர்கள் வழியே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைப்பதாக குற்றஞ்சாட்டி இந்த போராட்டம் நடைப்பெற்றது.
அசாம் சென்றபோது மாணவர்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். காரில் கடந்து சென்ற மோடியை நோக்கி, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய் என கோஷமிட்டனர்.
இந்நிலையில்,இன்று விஜயவாடாவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆந்திரா முழுவதும் ‘மோடி நோ என்ட்ரி’ என்ற பேனர்கள் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் இருக்கிறது.
விமான நிலையத்திலிருந்து விஜயவாடா வரை மோடியின் படம் இடம் பெற்ற பேனர்களை வைத்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.















