fbpx
Others

 செங்கல்பட்டு மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பப் போட்டி-சிறப்பு செய்தி

தமிழ்நாடு சிலம்பம் பேரவையில் இணைந்து செயல்படும் செங்கல்பட்டு மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பப் போட்டி கேளம்பாக்கம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.

நேரடி போட்டியுடன் 10 விதமான பாரம்பரிய போட்டிகள் நடைபெற்றது.இதில் 400 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.அனைவரையும் செங்கல்பட்டு மாவட்ட சிலம்பம் பேரவை தலைவர் .எம். கஜேந்திரன் துணை தலைவர்.பி. அகஸ்டின் வரவேற்றனர்.தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர் .ஜே .ஈசன் போட்டியை தொடங்கி வைத்தார்.மாநில துணை பொது செயலாளர் .தா. சண்முகப்பிரியா போட்டி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலைமுது மணி.
ஆர். முருகக்கனி ஆசான் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர். எம். ஜி. ராஜேந்திரன் திருவள்ளூர் மாவட்ட தலைவர்.சி. நந்தகுமார் சென்னை மாவட்ட தலைவர்.ஜே. சரவணன் சான்றிதழ்கள், பதக்கங்கள், பரிசு கோப்பைகளை வழங்கினர்.செங்கல்பட்டு மாவட்ட ந செயலாளர்.கே. சந்திரசேகர் பொருளாளர்.கே. மணிகண்டன் துணைத் தலைவர்.
எம் .தீபன் கார்த்திக், துணை செயலாளர்.டி. மாணிக்கராஜ் உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நடுவர்கள் போட்டியை சிறப்பாக நடத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close