ட்ரம்ப்–‘‘அமெரிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’

க்ரூக்ஸ் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 70 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்துள்ளார் என்று எஃப்பிஐ தெரிவித்தது. என்றாலும், இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஃப்பிஐ
அதிகாரிகள், “துப்பாக்கிச் சூட்டை ஒரு படுகொலை முயற்சியாக கருதுகிறோம்” என்று தெரிவித்தனர். “அதேநேரம், ஒரு நபர் தான் துப்பாக்கியால் சுட்டத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இப்போதைக்கு ஒருவரை சுட்டு வீழ்த்தியுள்ளோம்.தடயங்களை சேகரித்து வருகிறோம். அதனடிப்படையில் விசாரணைகள்இருக்கும்.”என்றுதெரிவித்துள்ளார்.இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு ட்ரூத் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், “முன் எப்போதையும்விட இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அமெரிக்கர்கள் வலிமையானவர்கள், உறுதியானவர்கள் என்ற நமது உண்மையான குணத்தை நாம் காட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ்பதிவில் “எனது நண்பர், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலிலும், ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகள். எங்கள் எண்ணங்களும்பிரார்த்தனைகளும்இறந்தவர்களின்குடும்பத்தினர்,காயமடைந்தவர்கள், அமெரிக்க மக்களுடன் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உள்ளிட்ட இந்திய தலைவர்களும் ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க் உள்ளிட்டோர் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “வன்முறை இடமில்லை” எனக் கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளையில் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் ரத்து செய்துள்ளார்.