செய்தி துளிகள் 26 / 6 / 25
1 )பாமகவில் இருந்து வெங்கடேஷ்வரன் எம்எல்ஏவை நீக்கம் செய்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வெங்கடேஷ்வரனுக்கு பதில் தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம் செய்யப்பட்டார். 2 ) காவிரியில் இருந்து ஜூலை மாதத்தில்
தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117-வது கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் நீர்வரத்து உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.3 ) இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம்
வசூலிக்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தேவையான கருவிகளை உருவாக்க வேண்டும். சுங்கக்கட்டணம் அமலுக்கு வந்தால் இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் ஃபாஸ்டேக் வாங்குவது கட்டாயமாகும். ஜூலை 15 முதல் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. சுங்கக்கட்டண வசூலை முறைப்படுத்தும் நோக்கத்தில் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.