நள்ளிரவில் சிறப்பு எஸ்.ஐ மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை !
கோவை., மார்ச்., 14 :
கோவைபுதூர் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (54) என்பவர் தமிழ்நாடு காவல் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இரண்டு மகள்கள் திருமணமாகி தனியாக உள்ள நிலையில். மனைவியும், இவரும் ஒரு வீட்டில் வசித்து வருகின்றார்கள். இவர் அடிக்கடி வீட்டில் மனைவியிடம் சண்டை போடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் (13.03.2025) அன்று வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மனைவியிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறியுள்ளார். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வ.உ.சி மைதானம் சென்ற அவர் அங்கு உள்ள ஒரு மரத்தில் வீட்டிலிருந்து தான் கொண்டு வந்த சேலையை வைத்து தூக்கு போட்டுள்ளார். அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், மரத்தில் யாரோ தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இறந்த நிலையில் கிடந்த சொக்கலிங்கத்தின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார் கூறுகையில் தனிப்பட்ட காரணங்களினால் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு இவர் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்தார். கோவை மாவட்ட நிருபர்க. அஜித் குமார்