fbpx
Others

நெல்லை– திருக்குறுங்குடியில் கல்வி வளர்ச்சி நாள் விழா…

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில்..கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் !!! இன்று (15.07.2024) திருக்குறுங்குடி TVS அரசு மேல்நிலைப்பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது . இவ்விழாவில் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திரு நாகராஜன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி அருணா அவர்கள் தலைமை தாங்கி காமராஜரின் கல்வி தொண்டு பற்றி உரையாற்றினார். தெய்வத் தமிழ்வழிபாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு சங்க வள்ளி மணாளன்அவர்கள்சிறப்புவிருந்தினராககலந்துகொண்டுகர்மவீரரின்வாழ்க்கைவரலாறுஎன்றதலைப்பில்சிறப்புரையாற்றினார். விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பட்டதாரி அறிவியல் ஆசிரியை திருமதி மேரி புஷ்பலதா அவர்கள் இவ் விழாவினை தொகுத்து வழங்கினார் இறுதியில் பட்டதாரி கணித ஆசிரியர் திரு ஐயப்பன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close