fbpx
Others

ஹரியானா, ஜம்மு இரு மாநிலத் தேர்தல்களம் குழப்பம்….?

மோடி, ராகுல்காந்தி

நாடாளுமன்றத்தேர்தலைத்தொடர்ந்து, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்களை நடத்தத் தயாராகியிருக்கிறது தேர்தல் ஆணையம். `ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்குச் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. முடிவுகள் அக்டோபர் 4-ல் வெளியாகின்றன  2024 நாடாளுமன்றத் தேர்தலில், பெரும்பான்மையைப் பெற முடியாத பா.ஜ.க-வும், 10 ஆண்டுகள் கழித்து எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கும் காங்கிரஸும் இரு மாநிலச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. வெற்றி யார் பக்கம்?  நாட்டையே உலுக்கியெடுத்த விவசாயிகள் போராட்டம், டெல்லியைக் கலங்கடித்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்குப் பிறகு ஹரியானா சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. இந்த இரண்டு போராட்டங்களிலும் கலந்துகொண்டு, மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கமிட்டவர்களில், ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் அதிகம். எனவே, தொடர்ந்து இரண்டு முறையாக ஹரியானாவை ஆளும் பா.ஜ.க-வுக்கு இந்தத் தேர்தல் கடினமாகவே இருக்கப்போகிறது. 90 தொகுதிகளைக்கொண்டது ஹரியானா மாநிலம். அங்கு, 2014 சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது பா.ஜ.க. 2019-ல் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், 40 தொகுதிகளில் வென்ற பா.ஜ.க., 10 தொகுதிகளை வென்ற மாநிலக் கட்சியான ஜே.ஜே.பி-ன் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்படவே, கடந்த மார்ச் மாதம் தனது ஆதரவை வாபஸ் பெற்றது ஜே.ஜே.பி. இருந்தும், சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது பா.ஜ.க. அந்தச் சமயத்தில், ஒன்பது ஆண்டுகளாக முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்தார். நயாப் சைனியை முதல்வராக்கியது பா.ஜ.க தலைமை. `கட்டார் ஆட்சி மீதான அதிருப்தியைச் சரிக்கட்டத்தான் இந்த மாற்றம்’ எனச் சொல்லப்பட்டது.  பாதுகாப்பில் கோட்டைவிட்ட மத்திய அரசின் அலட்சியத்தால் நடந்த இந்தத் தாக்குதல்கள், ஜம்முவில் பெரும்பான்மையாக இருக்கும் பா.ஜ.க வாக்காளர்கள் மத்தியில்கூட அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.

Related Articles

Back to top button
Close
Close