fbpx
Others

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தூண் …… ?

Thirupparankundram Temple mountains has two survey stones says India Survey Department RTIதிருப்பரங்குன்றம் மலையில் இரண்டு தூண் அல்லது சர்வே கல் வடிவத்தில் இரண்டு அமைப்புகள் உள்ளன. இதை இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டோர் தீபத்தூண் என்று கூறுகின்றனர். அதே சமயம் ஆளும் திமுக தரப்பினர், அதாவது கனிமொழி எம்பி உள்ளிட்டோர் இதை சர்வே கல் என்று கூறி உள்ளனர். அதற்கானஆதாரங்களையும் காட்டிஉள்ளனர்.இந்தநிலையில்தான்அரசுஆவணங்களின்படி திருப்பரங்குன்றம் மலையில் 2 சர்வே கற்கள் உள்ளன என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது. 1808-09, 1871-ம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன. அந்த கற்கள் வெறும் சர்வே கற்கள் என்று பதில் அளிக்கப்பட்டு உள்ளது. மதுரையை சேர்ந்த அப்துல் ஜாபர் என்ற நபர் கேட்ட கேள்விக்கு இந்த பதில் அனுப்பப்பட்டு உள்ளது.ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தூண் தொடர்பாக, தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள்நேற்றுஆய்வுமேற்கொண்டனர். துணை இயக்குநர் யதீஷ் குமார் மற்றும் உதவி இயக்குநர் லோகநாதன் ஆகியோர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு இந்த பணிகளை மேற்கொண்டது.எதிர்தரப்பினர் இந்த அமைப்பை நில அளவைக் கல் என வாதிட்டாலும், அதன் உண்மையான இயல்பு, வரலாற்றை இந்த ஆய்வு மூலம் கண்டறிய முடியும் எனத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர். விரிவான பகுப்பாய்வு மூலம் அதன் தன்மை உறுதி செய்யப்படும். ஆனால், மனுதாரர் தரப்பு ராம ரவிக்குமார் வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ். குமார், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, புதிய ஆதாரங்களை உருவாக்க அரசு அப்பகுதிக்குள் நுழைவது சட்டப்படி தவறு என குறிப்பிட்டார். அவர் மேலும், “தூணின் அமைப்பு குறித்த இந்த ‘புதிய’ ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், வழக்கின் தன்மையே மாறக்கூடும்” என்று எச்சரித்தார். திருபரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம், சமீபத்திய தமிழக அரசியல் வரலாற்றில் மத மற்றும் அரசியல் ரீதியிலான பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, திருபரங்குன்றம் மலையில் மீது உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பின்னரே இக்கோயில் விவகாரம் தீவிரம் அடைந்து சர்ச்சைக்கு உள்ளானது.தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு செயல்படுத்தப்படாதபோது, இந்து அமைப்புகள் தலைமையில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. பாஜக தொண்டர்களும் இதில் கலந்துகொண்டனர். மோதல்கள் ஏற்பட்டதையடுத்து, போலீசார் பாஜகவினர் மற்றும் இந்து முன்னையினரை கைது செய்தனர். அண்மைக் காலங்களில் மதக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே இத்தகைய நேரடி மோதலை தமிழ்நாடு இப்படி கண்டது அரிதான நிகழ்வு.இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு விசாரணை நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் மனுதாரர் ராம ரவிக்குமாரின் வழக்கறிஞர் கூறுகையில், அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கின்றனர். டிவிஷன் பெஞ்ச் இடைக்கால நிவாரணம் வழங்கவில்லை, எனவே தனி நீதிபதியின் உத்தரவு இன்னும் அமலில் உள்ளது. அதனால் அதை நிறைவேற்ற வேண்டும் என்று வாதம் வைத்தார். போலீஸ் கமிஷனர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், டிவிஷன் பெஞ்ச் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டதால் எஸ்.எல்.பி.க்கள்திருப்பரங்குன்றம்: “மகா தீபம் ஏற்றினால் அருகில் உள்ள தர்கா நிலை என்ன ஆகும்?” கோயில் நிர்வாகம் வாதம்! தொடரப்படவில்லை. அதிகாரிகள் பல வழக்குகளைத் தொடர விரும்பவில்லை . பக்தர் விரும்புவதால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏதாவது செய்யுமாறு நீதிமன்றம் கோயிலைக் கேட்க முடியாது. இறுதியில் நீதிமன்றம் சட்டத்தை தீர்மானிக்க வேண்டும். செயல்படுத்துவது நிர்வாகத்திடம் உள்ளது. சட்டம் & ஒழுங்கு பிரச்சினை இருப்பதாக நிர்வாகி உணர்ந்தால், அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்நீதிபதி சுவாமிநாதன்: இந்த வழக்கு தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல . அது கோவில் சொத்து சார்ந்ததும். இதில் யாரும் முடிவு எடுக்க முடியாது. கோவில் சொத்துக்கள் தீபம் ஏற்ற கூடாது என்று சொல்லும் உரிமை இல்லை. அரசு தரப்பு: கோவில் தேவஸ்தானத்திற்கு அதற்கான உரிமை இல்லை. கோவிலில் எங்கே தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும் அதை நடைமுறைப்படுத்துவது அரசின் முடிவாக இருக்க வேண்டும். கோவில் நிர்வாகம்தான் அதில் முடிவெடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும் என்று வாதம் வைத்தது. நாங்கள் மேல்முறையீட்ஸ் செய்துள்ளோம். அதனால் வழக்கை விசாரிக்க வேண்டும். கோவிலில் விளக்குஏற்றுவதற்கான அவகாசம், நேரம் முடிந்துவிட்டது. இனி அங்கே ஏற்ற முடியாது. இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close