fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

சென்னையில் தொடங்கியது பொங்கல் பரிசு கொடுக்கும் திட்டம் – காலை முதலே மக்கள் திரண்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்க பணமும் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்று ( 7-ஆம் தேதி திங்கட்கிழமை )முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அந்த பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதலே ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ரேஷன் கடைகளில் அரிசி, சேர்க்கரை பெறக்கூடியவர்கள் மட்டுமின்றி , ‘என் ‘ கார்டுகள் என்று சொல்லப்படும் எந்த பொருட்களும் வாங்காதவர்களுக்கும் இந்த பொங்கல் பரிசுதான் ரூ.1000 வழங்கப்படுகிறது.

ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை , 20 கிராம் முந்திரி , 20 கிராம் திராட்சை , 5 கிராம் ஏலக்காய் , 2 ஆதி நீல கரும்பு ஆகியவை இன்று முதல் அணைத்து ரேஷன் கடைகளிலும் கொடுக்கும் பணி தொடங்கியது.

இன்று திங்கட்கிழமை முதல் வரும் 12-ஆம் தேதி வரை என 6 நாட்களுக்கு இந்த பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

நாள் ஒன்றிற்கு 200-300 ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

ரொக்கமாக ரூ.1000 கொடுப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் அந்த கூட்ட நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாட்களில் வழங்கப்படும் என்ற வெவரம் ரேஷன் கடைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்டுகள் அல்லது தெருக்கள் வாரியாக கூட்ட நெரிசல் இல்லாமல் பொருட்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 6 உதவி ஆணையர்கள் அலுவலகம் வழியாக இந்த பனி ஒருங்கிணைக்கப்ட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன.இன்று முதல் பொங்கல் பரிசு பொருட்களும் 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படுவதால் காலை முதலே அணைத்து ரேஷன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

ரேஷன் கடைகள் பொதுவாக 8.30 மணிக்குத்தான் திறக்கப்படும் ஆனால் அதற்கு முன்னதாகவே 6 மணியிலிருந்தே ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் சேர தொடங்கினர்.

ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் நேற்று மாலையே வந்து சேர்ந்து விட்டது. ரொக்கப்பணம் மட்டும் காலையில் வினியயோகிக்கப்பட்டது.

இந்த பரிசு பொருட்களை குடும்ப தலைவர் அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தன பெற முடியும் என்றும் , வீட்டில் வேலை செய்பவர்களோ அல்லது உறவினர்களோ , நண்பர்களோ பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு பொருட்களை பெற்றதற்கு சான்றாக ஒவ்வொருவரும் இரண்டு இடங்களில் கையெழுத்து போட வேண்டும்.

முதல் கையெழுத்து பொங்கல் பரிசு பொருட்களை பெற்றதற்கும், இரண்டாவது கையெழுத்து ரொக்கப்பணம் ரூ.1000 வாங்கியதற்கு என இரு முறை போட வேண்டும்.

இவ்வாறு பொங்கல் பரிசாக வழங்கப்படும் இந்த ரொக்க பணம் வெளிப்படையாக இரு 500 ரூபாய் தாள்களாக கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

இன்று முதல் நாள் என்பதால் மக்கள் சில மணிநேரம் காத்திருந்து வாங்கும் நிலை இருந்தது. ஆனால் நாளை முதல் காலை 8.30 மணிக்கே விநியோகம் தொடங்கி பகல் 12.30 மணி வரையும் , பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை பெற்று செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close