அந்த 6 பேர்…! ஒரு கிராமத்துக்கு தடை விதித்த அதிகாரிகள்…! எல்லாம் கொரோனா மயம்!
Trichy corona affected a family

சென்னை:
திருச்சி அருகே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந் நிலையில் திருச்சி மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அந்த கிராமமே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

மணப்பாறை என்ற பகுதியை அடுத்த கண்ணுடையான்பட்டி என்ற ஊராட்சியை சேர்ந்த கிராமம் ஒன்றில் 75 வயது மூதாட்டிக்கு கொரோனா இருந்தது.
இந் நிலையில் மூதாட்டியின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. ஒரே குடும்பத்தில் 6 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
6 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அந்த கிராமத்தையே சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர்.















