fbpx
GeneralRETamil Newsஉலகம்

உலக நாடுகளை ஒருவழியாக்கும் கொரோனா…! ரமோன் மக்சேசே விருது ரத்து என அறிவிப்பு!

Magsaysay award cancelled

பாங்காக்:

கொரோனா காரணமாக ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசே நினைவாக மக்சேசே விருது அறிவிக்கப்படும். 6 பிரிவுகளில் ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், அதன் நிறுவனங்களுக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வந்தது.

பின்னர் 2009ம் ஆண்டு முதல் ஒரே பிரிவில் வழங்கப்படுகிறது. 1958ம் ஆண்டு முதல் மணிலாவை தலைமையிடமாக கொண்டுள்ள ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை சார்பில் வழங்கும் இவ்விருது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.

இந்தியாவில் இருந்து வினோபாபாவே, ஜெயபிரகாஷ் நாராயண், சத்யஜித்ரே, அன்னை தெரசா, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் இந்த விருதை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு கொரோனா பரவி வருவதால் ரமோன் மக்சேசே விருது யாருக்கும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close