RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்: பொன்ராதாகிருஷ்ணன்
சிலை கடத்தல் தொடர்பான விசாரணைகளை சிபிஐ விசாரிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் சிலை கடத்தல் வழக்குகளில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார் என்று குறிப்பிட்டார்.
பன்னெடுங்காலமாக மீட்க முடியாத சிலைகளை மீட்டுக் கொண்டு வந்தவர் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் என்றும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவருக்கு துணையாக நின்று செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சிபிஐ விசாரிப்பது குறித்து தமிழக அரசு முடிவிற்கு மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.