fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

புதிய கொரோனா மையங்களை உருவாக்கம்..! மாவட்டங்களுக்கு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு!

New corona centre in districts

சென்னை:

புதிய கொரோனா மையங்களை உருவாக்க தமிழக அரசு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு – மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டது

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கூடுதல் தலைமைச் செயலாளார் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் வசதி அளிக்கவும், தொற்று ஏற்பட்டு அறிகுறி தென்படாதவர்களுக்கு கொரோனா மையங்களில் தங்க வைக்கவும், புதிய கொரோனா மையங்களை உருவாக்கவும் நிதி தேவைப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் கோரியிருப்பதாக, அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 21-ந் தேதி நிலவரப்படி 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ள மாவட்டங்களுக்கு தலா ரூ.3 கோடி என்றும், ஆயிரம் மற்றும் 2 ஆயிரத்துக்கு இடைப்பட்ட எண்ணிக்கை உள்ள மாவட்டங்களுக்கு தலா ரூ.2 கோடி என்றும் (சென்னை தவிர) மற்ற மாவட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி என்றும் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அதன்படி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.3 கோடி, நெல்லை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, கோவை, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், தென்காசி, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.2 கோடி, அரியலூர், திருப்பத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, நாகை, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி என ரூ.69 கோடி தொகையை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கி ஆணையிடப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close