fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.07 கோடியாக உயர்வு….! 5 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை!

1.07 Crore corona cases worldwide

ஜெனீவா:

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,07,93,417 பேராக உள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 59,30,148ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,18,046 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உலக பாதிப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 4ல் ஒரு பங்கு உள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 27,78,500 ஆக உயர்வு என்றும் அந்நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,30,789ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 605,220 என்பதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,848 ஆகும். பிரேசிலில் 1,453,369 பேரும், ரஷ்யாவில் 654,405 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் 313,483 பேர், ஸ்பெயினில் 296,739 பேர், பெரு நாட்டில் 288,477 பேர், சிலியில் 282,043 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close