fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

50 நாட்கள் கழித்து…! அரசு ஊழியர்களை ‘ஸ்பெஷலாக’ கவனித்த அரசு…!

Buses operating for government employees in tamilnadu

சென்னை: 50 நாட்களுக்கு பிறகு இன்று முதல் அரசு பேருந்துகள் அரசு ஊழியர்களுக்காக இயங்குகின்றன.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களை பச்சை மண்டலமாக்கி 4ம் கட்ட ஊரடங்கில் இருந்து சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று முதல் பச்சை மண்டலங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவித பணியாளர்களுடன் இயங்க உத்தரவிட்டுள்ளது அதை தொடர்ந்து பணியாளர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து பணியிடத்துக்கு சென்று வர பேருந்து வசதியினை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், அரசு ஊழியர் சங்கங்களுடன் கலந்து பேசின. பின்னர் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு போக்குவரத்துக்கு பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட தலைநகரத்துக்கு வேலூரில் இருந்து பேருந்துகள் இயங்குகின்றன.

தருமபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து காலையில் ஒரு பேருந்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே பேருந்து அதே ஊழியர்களை மீண்டும் மாலை திரும்பி கொண்டு வந்து விடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 நாட்கள் கழித்து இன்று முதல் அரசு பேருந்துகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close