fbpx
RETamil Newsதமிழ்நாடு

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றுடன் பணி ஒய்வு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திரா பனெர்ஜி 2002 ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார் பின்னர் அவர் டெல்லி உய்ரநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.

கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்துவந்தார் .

இந்நிலையில் அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு கிடைத்ததை அடுத்து நாளை அவர் பதவி ஏற்கவுள்ளார். இன்றுடன் அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிநிறைவு பெற்றதையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

அவ்விழாவில் பேசிய இந்திரா பனெர்ஜி ,முதல்வரிடம் தான் ஒரு கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு அவர் நம்பிக்கையுடன் உறுதி அளித்ததாகவும் கூறினார். அதாவது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் எல்லா பணிகளுக்கு கிடைக்கும் நிதியை தமிழக அரசு ஒருபோதும் நிறுத்தாது என நம்பிக்கையுடன் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close