fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு…! கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை!

GO releases medical equipment's funding

சென்னை:

கூடுதலாக மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ.21 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 5ம் கட்ட ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ஊரடங்கு நீடித்தாலும், கடந்த மாதம் 1ம் தேதியில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனாலும் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் 1,500ஐ தாண்டி வருகிறது. இதையடுத்து, சென்னை,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில்  கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.21 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close