GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
திருப்பதி கோயில் அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி…! சிகிச்சை பலனின்றி மரணம்!
Tirupathi temple priest dead corona

திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூயர் உட்பட சில அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது முதல் முறையாக கொரோனா தொற்றால் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார்.
















