fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொரோனா பரவல் எதிரொலி..! கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி ஆலோசனை..!

Corona spread, Chief minister edapaddi palanisamy discussion

சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு அமலில் உள்ளது. நோய் பரவல் உச்சத்தில் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் விதி விலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரித்து வருவதை தடுக்க, 19ம் தேதியில் இருந்து, வரும், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இன்று முதல், 7 நாட்களுக்கு மதுரையிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில், கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இந் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் இருந்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தில், தலைமை செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close