எடப்பாடிபழனிசாமி-`யாரிடமும் கையேந்தி நிற்க அவசியம் இல்லை;


நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாகஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்திருக்கிறார் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது ஒத்திவைத்துவிட்டு ஆகஸ்ட் 16-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியானது ஆண்டுக்கு இரண்டு முறை செயற்குழு நடத்த வேண்டும். அதன்படி செயற்குழுவை முதலில் நடத்திவிட்டு, அதில் விவாதிக்கப்பட்ட விவகாரத்தோடு, தேர்தல் தொடர்பாகவும் மா.செ.க்கள் கூட்டம் நடத்தலாம். முதலில் மா.செ.க்கள் கூட்டம் நடத்தினால், செயற்குழுவிற்கு பிறகும் மா.செ.க்கள் கூட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஆகிவிடும்’ என்று சீனியர்கள் சிலர் அட்வைஸ் செய்து இருக்கிறார்கள். அதன்படிதான், மா.செ.க்கள் கூட்டம் ஒத்திவைத்துவிட்டு, ஆகஸ்ட் 16ல் செயற்குழுவை கூட்டியிருக்கிறார் எடப்பாடி.இதனிடையே, செயற்குழுவில் எடப்பாடியின் தலைமைக்கு எதிராக அதிமுக-வினர் கிளர்ந்து எழுந்து கலகம் செய்யவிருக்கிறார்கள். எடப்பாடிக்கு எதிராக செயற்குழு கொந்தளிக்க போகிறது’ என்று ஓ.பி.எஸ்., சசிகலா அனுதாபிகள் கிளப்பி விட்டனர். ஆனால், எவ்வித குழப்பமும் இல்லாமல் சுமூகமாக நடந்து முடிந்திருக்கிறது அ.தி.மு.க-வின் செயற்குழு கூட்டம்.