fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

இன்று முதல் இயங்க தொடங்கிய தனியார் பேருந்துகள்…! கட்டணம் உயர்வா?

Private busses functioning

சென்னை:

தமிழகத்தில் இன்று முதல் இயங்க தொடங்கி உள்ள தனியார் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

கொரோனா தளர்வு காரணமாக தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல், 50 சதவிகித அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் உள்ள தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட வில்லை.

இதையடுத்து இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. அதன்படி பேருந்துகளும் இயங்கி தொடங்கியுள்ளன. அதில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கூறி இருப்பதாவது: ,இன்று முதல் காலை 5 மணி தொடங்கி இரவு 9 மணி வரை மட்டுமே பேருந்துகளை இயங்கும். அரசின் அறிவிப்பின்படி மண்டலம் விட்டு மண்டலம் இயக்க அனுமதி கிடையாது.

ஓட்டுநர், நடத்துநர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நடத்துநர்கள் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும்.பேருந்தில் வரும் பயணிகளுக்கு சானிட்டைசர் வழங்க வேண்டும்.பேருந்துகளில் கைப்பிடி மற்றும் கை எங்கெங்கு படுகிறதோ அங்கு பாதுகாப்பாக சானிடைசர் வைத்துத் துடைக்க வேண்டும்.

60 சதவிகித பயணிகளை மட்டுமே பேருந்துகளில் ஏற்றி, இறக்க வேண்டும். பழைய கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close