கேரளா மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது….
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. கேரளத்தில் 140 தொகுதிகளில் சுமார் 2.7 கோடி பேரும், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் சுமார் 9.5 லட்சம் பேரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்காக கேரளாவில் 30,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளும், புதுச்சேரியில் 1000-க்கும் மேற்பட்டவாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.இவற்றில் முறையே 2040 மற்றும் 209 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டு, அங்கு கூடுதல்பாதுகாப்புக்குஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகதேர்தல்ஆணையம்கூறியுள்ளது.கேரளத்தில்883வேட்பாளர்களும், புதுச்சேரியில் 294 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்புப் படை கம்பெனிகள் கேரளத்தில் 160, புதுச்சேரியில் 45 என்ற எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளன.இந்தியாவில் 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக
அஸ்ஸாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கேரளா மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7மணிக்குவாக்குப்பதிவு துவங்கியுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு.கேல்கர் வெளியிட்ட தகவல்களின்படி தேர்தல் குறித்த பல்வேறு விவரங்கள்: சட்டப்பேரவைத் தொகுதிகள் –140 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 2,71,42,952