fbpx
Others

புதிய கட்சி துவக்கம்… விரைவில்…அண்ணாமலை….

தமிழக சட்டசபை தேர்தலில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடவில்லை. அதிமுக பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில் தனக்கு கேட்ட ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! தொகுதியினை அதிமுக கொடுக்கவில்லைஎன்பதற்காக அண்ணாமலை போட்டியிடவில்லை என்று பேசப்பட்டது. இந்த நிலையில் தான் நான் எந்த தொகுதியும் கேட்கவில்லை என்றும், ஏன்தேர்தலில்போட்டியிடவில்லைஎன்பதுகுறித்தும்அண்ணாமலை பதில் அளித்துள்ளார். கூறியதாவது:- ரொம்பநாளைக்குமுன்பே நான்போட்டியிடவில்லைஎன்றுஎழுத்துப்பூர்வமாக கொடுத்துவிட்டேன். கட்சியின் உயர் மட்ட கூட்டத்தில் கூட நான் சொல்லிவிட்டேன். உயர் மட்ட குழுவில் இருந்து போன பட்டியலில் இருந்து கூட எனது பெயர் கிடையாது. பியூஸ் கோயலிடமும் நான் ஒருவாரத்திற்கு முன்பே தெரிவித்துவிட்டேன். பாஜக பொதுச்செயலாளர் எல். சந்தோஷ், தலைவர் நிதின் நபினிடமும் என்னுடையகருத்தைநான்சொல்லியிருந்தேன்.அதனால்கட்சிஎன்னுடையகருத்துக்குமதிப்பளித்துஎன்னைபிரசாரத்திற்குபயன்படுத்தியிருப்பது மகிழ்ச்சிதான். காரணம் இந்த தேர்தலை பொறுத்தவரை எல்லோருக்கும் பணி செய்கிறேன். தமிழ்நாடு முழுவதும்பாஜகவேட்பாளர்கள் 27 பேர் இருக்கிறார்கள்.தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன். எனக்கும் 21 ஆம் தேதி முடியும் வரை வரிசையாக பிரசாரம் உள்ளது. வேட்பாளர் போட்டியில் நான் இல்லை. நான் எந்த தொகுதியும் கேட்கவில்லை. நான் நிற்க வேண்டும் என்றால் எந்த தொகுதியிலும் நிற்கலாம். எல்லா தொகுதிக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கோவையில் சிட்டிங் எம்.எல்.ஏ இருக்கிறார் அவர் போட்டியிடுவதுதான் முறை.மொடக்குறிச்சிதொகுதியில்நிறையபேர்வேலைபார்த்துஇருக்கிறார்கள்.தெற்கில்எம்.ஆர்காந்திமீண்டும்போட்டியிடுகிறார். நான் எந்த ரேசிலும் இல்லை. எந்த தொகுதியும் கேட்கவில்லை. ஏப். 23 வரை பிரசாரம் செய்வது என்னுடைய வேலை. அதன்பிறகு மற்றதை நான் பேசுகிறேன்.எல்லாசண்டையையும் ஒரே நேரத்தில் போட முடியாது. இந்த தேர்தலில் என்னுடைய சண்டை என்பது பிரசாரம் மூலமாகத்தான்.2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது எனக்கு சிறு வருத்தம் இருந்தது. என்னை நம்பி பல வேட்பாளர்களை போட்டியிட வைத்தோம். ஓபிஎஸ், டிடிவிக்கு பிரசாரம் அதிகம் செய்ய முடியவில்லை. காலம் இருக்கிறது.நான்நிறுத்தியவேட்பாளர்களுக்கு கூட பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அந்த மனக்குறை இருந்தது. அது இந்த தேர்தலில் நீங்கிவிடும். காலம் இருக்கிறது. காட்சிகள் மாறத்தான் போகிறது. நிறைய தேர்தல் வரத்தான் போகிறது. அன்னைக்கு நாம போட்டி போட்டுக்கொள்ளலாம். அன்போடு இருக்க கூடிய மக்கள் அன்போடுதான் இருப்பர்கள். இந்த தேர்தலில் சண்டை என்பது திமுகவின் தவறுகளை எடுத்து சொல்ல வேண்டும். தமிழ்நாடு முழுவதும் போக வேண்டும்” என்று பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close