நீடாமங்கலம் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி—சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அகரப்பொதக்குடியில் 26.03. 2026 வியாழக்கிழமை பள்ளியின் 46வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை ஏற்று திருவாளர் ஜெ. இன்பவேணி வட்டார கல்வி அலுவலர் அவர்கள் சிறப்பித்தார்கள். விழாவில் திருவாளர்கள் ரெ. மணிகண்டன்வட்டார கல்வி அலுவலர் ப.சத்யா வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தலைமை ஆசிரியர் திருமதி.இரா. இராஜலெட்சுமிஅவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருமதி.ப.நான்சி இடைநிலை ஆசிரியர் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் கலந்துகொண்டு திருவாளர்கள் இராதிகா தலைவர் பள்ளி மேலாண்மை குழு, அ.சே பக்ருதின் அகமது தலைவர் பெற்றோர் ஆசிரியர் கழகம்,ப.ஜூனைதா பேகம் துணை தலைவர் பள்ளி மேலாண்மை குழு, ரேவதி துணைத்தலைவர் பெற்றோர் ஆசிரியர் கழகம், மு.இ. அப்துல்காதர் சமூக ஆர்வலர் எம்.சபீர் அகமது தலைவர் கும்பகோணம் கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம் ஏ.ஏ.முனாப் செயலாளர் கும்பகோணம் கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம்,ரெ. ஆனந்தன் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் ஜெ.மதியழகி சிறப்பு பயிற்றுநர் ப.ஜெகதீஸ் பாபு மா.இ.செயலாளர் த.நா.அறிவியல் இயக்கம்,வை. செல்வராஜ் செயலாளர், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம், செ. சந்தானராமன் செய்தியாளர் தினமணி, தினமலர் நாளிதழ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் அருகில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இருந்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பள்ளியின் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர்கள், மாணவ, மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், அங்கன்வாடி அமைப்பாளர், உதவியாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் வகுப்பில் சேர்ந்த 18 மாணவர்களுக்கு மலர் கொத்துகள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரிய பெருமக்களும் இதர பணியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியில்திருமதி.மா.திவ்யா M.Sc, B.Ed அவர்கள் நன்றியுரை கூறி விழாவை நிறைவு செய்தார்.