வால்பாறை–தென் இந்திய திருச்சபை (CSI) திருச்சிராப்பள்ளி– சிறப்புசெய்தி…


கோவை மாவட்டம் வால்பாறையில், தென் இந்திய திருச்சபை (CSI) திருச்சிராப்பள்ளி–தஞ்சாவூர் திருமண்டலத்தின் கீழ் செயல்படும் ஆனைமலை மறைமாவட்டம் சார்பாக இன்று ஞாயிறுபள்ளி திரளணி சிறப்பாக நடைபெற்றது.இந்த திரளணியில் ஏராளமான ஞாயிறுபள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, சமூக விழிப்புணர்வை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். குழந்தைகளின் ஒழுக்கம், நற்பண்புகள், சமூகவாழ்வு, அமைதி மற்றும் ஒற்றுமை போன்ற கருத்துகளை முன்வைத்து இந்த நிகழ்வு நடைபெற்றது.இதில் திருச்சபை ஆயர்கள், மறைமாவட்ட நிர்வாகிகள், ஞாயிறுபள்ளி ஆசிரியர்கள் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தி, விழிப்புணர்வு செய்திகளை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றனர்.இந்த நிகழ்வு வால்பாறை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், குழந்தைகள் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு சிறப்பான முயற்சியாக அமைந்தது.கோவை மாவட்ட புகைப்படக் கலைஞர்ஜெயப்பிரகாஷ்
.D