விஜய்–வருமானவரித்துறை வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு….
கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, 2015-16ஆம் ஆண்டில் விஜய் தனது வருமானம் ரூ.35.42 கோடி என வருமான வரித்துறைஇடம்காட்டிஇருந்தார்.ரெய்டில்கைப்பற்றஆவணங்களுடன்,அவர்தாக்கல்செய்தகணக்குகளைவருமானவரித்துறையினர்ஒப்பிட்டுபார்த்தனர்.அப்போதுதான் விஜய் ரூ.15 கோடியை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, ‘புலி’ திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட ரூ.15 கோடி பணத்தை அவர் தனது வருமான கணக்கில் காட்டாமல் மறைத்திருந்தார்.இதனையடுத்துகடந்த2022ஆம்ஆண்டுவிஜய்க்குரூ.1.50கோடிஅபராதம் போட்டுவருமானவரித்துறைநோட்டீஸ்அனுப்பியிருந்தது. எல்லாம் ஓகே தான்.. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி முன்னதாக அபராதம் விதித்திருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் தாமதப்படுத்திவிட்டு 2022ஆம்ஆண்டில்தான்வருமானவரித்துறையினர் அபராதம் விகித்திருக்கின்றனர்.இதுசட்டப்படிதவறுஎன்று,விஜய்வருமானவரித்துறையினரின் இந்த அபராத உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தார்.எதிர்த் தரப்பில்ஆஜரானவருமானவரித்துறை,எங்கள்தரப்பில்உரியகாலத்தில்தான்அபராதம்விதிக்கப்பட்டிருக்கிறது. விஜய்தாக்கல்செய்திருந்த மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் வழங்கிய அமர்வு முன்பாக இறுதி விசாரணை நடைபெற்று, தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல்ஒத்திவைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குகின்றனர்.