பொங்கல் பரிசு தொகுப்புமற்றும்ரூ.3 ஆயிரம் பணம்–முதலமைச்சர்அறிவிப்பு..
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரேஷன் அரிசிஅட்டைதாரர்கள் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நேற்று முன்தினம்அறிவித்தார் இதனை பெற்றுக்கொள்ள வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.248 கோடியே 66 லட்சத்து 17ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.6,687.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அரசாணை பிறக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும்ரூ.3 ஆயிரம் பணம் வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னை கலைவாணர்அரங்கத்தில் விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.