யூடியூபர் முக்தார் உருவ பொம்மை எரிப்பு!

யூடியூபர் முக்தார் அகமது-வை கண்டித்து
பெருந்தலைவர் மக்கள் கட்சி – நாடார் அமைப்புகள்,
நாடார் சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்
காமராஜர் நினைவிடத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்என்.ஆர்.தனபாலன்கண்டனபேருரைசெங்குன்றம் டிச. யூடியூபர் முக்தார் அகமதுவை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி, நாடாரை அமைப்புகள் மற்றும் நாடார் சங்கங்கள் இணைந்து என்.ஆர்.தனபாலன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது,ஆர்ப்பாட்டத்தில்என்.ஆர்.தனபாலன்பேசியதாவது:-காமராஜர் பற்றியும் நாடார் சமுதாய மக்கள் பற்றியும் தவறான கருத்துக்களை வெளியிட்ட முக்தார் பெருந்தலைவர் நினைவிடத்தில் மண்டியிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்அப்போதுதான் அவருக்கு எதிரான போராட்டங்கள் முடிவுக்கு வரும். அவருக்கு துணையாக நிற்கும் தி.மு.க. அரசுக்கு எதிராக கோட்டை நோக்கி பேரணியும் நடத்துவோம். காமராஜரின் புகழை அழிக்கநினைக்கும்அரசின்நாட்கள்எண்ணப்படுகின்றன, காலங்கள் மாறும் அப்போது முக்தார் சரணடைந்தே தீரவேண்டிய நிலை உருவாகும், முக்தாருக்குகொடுக்கப்படும்காவல்துறைபாதுகாப்பின்நாட்களும்எண்ணப்படுகின்றது. இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கண்டனப் பேரூரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில்பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், மாநில அமைப்பு செயலாளர் புழல்A.தர்மராஜ், மாநில பொருளாளர் பெ.பிரபாகரன், மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.குருசாமி நாடார், மாநில வர்த்தக அணி தலைவர் கும்மிடிபூண்டி கே.காமராஜ், வர்த்தக அணி செயலாளர் எம்.வைகுண்டராஜா, வர்த்தக அணி பொருளாளர் எம்.சுந்தரபாண்டியன், தலைமைநிலை செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன்,நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், பெரம்பூர் நாடார் சங்கத் தலைவர் த.பத்மநாபன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளர் திலகபாமா நாடார், மகாஜன சங்கத் துணைத்தலைவர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, பெருந்தலைவர் காமராஜரின் பேத்திகள் மயூரி காமராஜ், கமலிகா காமராஜ், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த.ரவி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன் ராஜா, நாடார் சங்க கூட்டமைப்பின் தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன், ஹரி நாடார், சி.பா.ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடத் தலைவர்.ஆர். முருககனி,அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர். இசக்கிமுத்து நாடார், ஞசெங்குன்றம் வட்டார நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர். குப்பு சங்கரலிங்கம்பொருளாளர். தாளமுத்து,தேசிய நாடார் பேரவை பொதுச்செயலாளர். விஜயகுமார் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட காமராஜரின் உண்மை தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.முடிவில் முக்தார் அகமதுவின் உருவபொம்மைசெருப்பால் அடித்து பெட்ரோல் ஊத்தி கொளுத்தப்பட்டது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் உடனே குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து நெருப்பை அணைத்தனர்.