fbpx
Others

இந்து சமய அறநிலையத்துறையின்வேலைவாய்ப்பு…..

Is the history of temples being rewritten? - Denial of Hindu Religious ...இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை திருவொற்றியூர் அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படிவிண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை என்பது தமிழகத்தில் உள்ள இந்து கோயில் நிர்வாகங்களை கவனித்து வருகிறது. கோயில் நிர்வாக பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வரும் அறநிலையத்துறை, கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் சென்னை திருவொற்றியூர் அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் காலியாக உள்ள 04 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம். பணியிடங்கள் விவரம்: * அலுவலக உதவியாளர்: 01 * சுயம்பாகி: 01 * காவலர்: 01 * தோட்ட வேலை: 01 என மொத்தம் 04 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வி தகுதி: * அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சுயம்பாகி பணிக்கு தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும். மற்றும் திருக்கோயிலின் பழக்க வழக்கத்திற்கேற்ப நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் பூஜை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்.தோட்ட வேலை மற்றும் காவலர் பணியிடங்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும். சம்பளம் எவ்வளவு? * அலுவலக உதவியாளர்: ரூ.12,600 – 39,900 * சுயம்பாகி: ரூ.13,200 – 41,800 * காவலர்: ரூ.10,000 (தொகுப்பூதியம்) * தோட்ட வேலை: ரூ.11,600 – 36,800  விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பணியிட விவரங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் அல்லது hrcetn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி உதவி ஆணையர் / செயலாளருக்கு, அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில் அலுவலக இருப்பு, அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை – 19 என்று தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25.10.2025, மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Related Articles

Back to top button
Close
Close