*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*–சிறப்பு செய்தி
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*
தேதி: 28.06.2025
📰 *பத்திரிகை செய்தி*
📌 *விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய கும்பலை அதிரடியாக கைது செய்த காவேரிப்பாக்கம் காவல்துறையினர்*
❇️காவேரிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரிப்பாக்கம் மற்றும் பொன்னப்பத்தாங்கல் குடியிருப்பு பகுதிகளில், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
❇️இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *.விவேகானந்த சுக்லா இ.கா.ப.,* அவர்களின் உத்தரவுப்படி, அரக்கோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் மேற்பார்வையில், காவேரிப்பாக்கம் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் .அருண்குமார் மற்றும்.ராமதுரை ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
❇️தீவிர தேடுதல் நடவடிக்கையின்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 28.06.2025 இன்று காலையில், பொன்னப்பத்தாங்கல் கூட்டு சாலையில் வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த1.) பானவரத்தைச் சேர்ந்த ராஜேஷ் 2.) ராயப்பேட்டைச் சேர்ந்த நாகராஜ் பிடிபட்டனர். விசாரணையில், அவர்கள் திருடியிருந்த 8 இருசக்கர வாகனங்கள்—including ஹிமாலயா, பேஷன் ப்ரோ, ஸ்ப்ளெண்டர்+, TVS ஸ்கூட்டி, ஜூபிடர், ஹோண்டா ஆக்டிவா போன்றவைகள்—மீட்க்கப்பட்டன.
❇️மேலும், திருட்டு வாகனங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ராயப்பேட்டைச் சேர்ந்த எதிரி 3. தினேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மூன்று எதிரிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
❇️மேற்படி வாகனங்களை உரிமையாளர்களிடம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.