fbpx
Others

ஈரான்–அமெரிக்க கப்பல்கள் மீது தங்களது தாக்குதல் இருக்கும்….

US Iran warஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா இன்று அதிகாலை தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு நாங்கள் தாமதமின்றி உடனடியான பதிலடியை கொடுப்போம் என ஈரான் எச்சரித்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்க கப்பல்கள் மீது தங்களது தாக்குதல் இருக்கும் எனவும் கூறியிருக்கிறதுஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று சொல்லி கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இஸ்ரேல், அந்நாட்டின் மீது தாக்குதலை தொடுத்தது. இதனை தொடர்ந்து இன்று அமெரிக்கா நேடியாக தாக்குதலில் இறங்கியிருக்கிறது.ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் என மூன்று அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியுள்ளது. தாக்குதல் முழு வெற்றியை கொடுத்திருக்கிறது என்றும், அணு சக்தி மையங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன எனவும் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், இஸ்ரேல் இதனை மறுத்திருக்கிறது. ஃபோர்டோ அணுசக்தி மையத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.அதேநேரம், அமெரிக்கா மீது பதிலடி தாக்குதல்கள் தொடங்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் விமானப்படை தளங்கள் சவுதி, பஹ்ரைன் என பல அரபு நாடுகளில் இருக்கிறது. இதன் மீது நேரடியாக தாக்குதல் நடத்தினால் அது, சரிபட்டு வராது. எனவே செங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்களை தாக்கி அழிக்க ஈரான் முயற்சிக்கும். ஈரானுக்கு சப்போர்ட்டுக்கு ஹவுதிக்கள் களமிறங்குவார்கள். இதனால் செங்கடல் பகுதியில் தனது கண்காணிப்பை அமெரிக்கா அதிகரித்திருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close