fbpx
Others

புஞ்சைபுளியம்பட்டி –குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்..

புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி காவிலிபாளையம் ரோட்டில் நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து உடனே புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சாலை மறிய லில் ஈடுபட்டபெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட் டனர்.குடிநீர் வழங்கக்கோரி.
அப்போது பெண்கள் கூறும்போது, விண்ணப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது ஆனால் நடந்த ஒரு வாரமாக கே.வி.கே. காலனி பகுதிக்கு சரியாககுடிநீர்வினியோகிக்கப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். இதுதவிர எங்கள் பகுதியில் உள்ளதெருவிளக்கும் சரியாக எரிவதில்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும்சிறுவர், சிறுமிகள், பெண்கள் அச்சப்படுகிறார்கள் எனவே குடிநீர் வழங்கவும், தெருவிக்குபொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.அதற்கு போலீசார், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு சாஅங்கிருந்து கலைந்து சென்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close