Others
கோவை–தடகள போட்டியில் முதலிடம் பிடித்த பெண் காவலர்..!

கோவை மாவட்டம், சுந்தராபுரம் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணிபுரிபவர் காவலர் அன்னபூரணம், இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச்சார்ந்தவர். கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 39-வது மாநில மூத்தோர் தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தைப்பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.