NEWS 1 யார் அந்த சார் ! NEWS 2 அண்ணாமலை கேள்வி..?
அண்ணா பல்கலை.,யில் மாணவி வன்கொடுமை வழக்கு FIRயில் மற்றொரு அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. 1/2 மணி நேரத்திற்கும் மேலாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அயோக்கியன் ஞானசேகரன், நான் சொல்லும் சாருடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் மிரட்டி உள்ளான். யார் அந்த சார் !, பல்கலை., பேராசியர்? அல்லது வேறு நபரா? எனதெரியவில்லை.இதனால்,முக்கியபிரமுகருக்கும்தொடர்புஇருப்பதுஉறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், தந்தை பெயர். செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் உள்ள FIR-ஐ வெளியிடலாமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். பெண்ணின் புகாரில் எழுதப்பட்ட FIR மிகவும் மோசமான முறையில் இருந்தது.காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது. FIR வெளியிட்டதற்காக திமுகவினர் வெட்கப்பட வேண்டும் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.BREAKING: மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் சீண்டல் அண்ணா பல்கலை.,யில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரன், மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகியுள்ளது. காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த 21ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவியின் தோழியிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். ஞானசேகரனின் செல்போனை ஆய்வகத்துக்கு அனுப்பி சோதித்ததில், 5 ஆபாச Videoக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
.
