தமிழ்நாடுயூனியன்ஆப்ஜர்னலிஸ்ட்- மாவட்ட பேரவை கூட்டம்..
தமிழ்நாடுயூனியன்ஆப்ஜர்னலிஸ்ட்திருவண்ணாமலை மாவட்ட பேரவை கூட்டம் செங்கத்தில் உள்ள கணேசர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர். ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட பொது செயலாளர். சுரேஷ், மாவட்ட பொருளாளர். நடராஜன், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் சேது, விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர்.தனஞ்செயன் வரவேற்றார். மாநிலத் தலைவர்.பி. எஸ். டி. புருஷோத்தமன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில பொது செயலாளர். முத்து, மாநில அமைப்பு செயலாளர்கள் . வேளாங்கன், தமிழ்செல்வன்மாநில இணைச் செயலாளர்கள். முருகக்கனி, லட்சுமணன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர். தேவேந்திரன், வேலூர் மாவட்ட தலைவர். கல்யாண சுந்தரம்,தர்மபுரி மாவட்ட தலைவர். விஸ்வநாதன், திருச்சி மாவட்ட துணை தலைவர். ரமேஷ், ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர்கள். சபேஷ், கோபிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட பத்திரிகையாளர்கள் குழந்தைகள் 10 12-ஆம் வகுப்பிலே தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி தொகை வழங்கப்பட்டது.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று திரும்பிய மாநில தலைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது. பணியின் போது மரணம் அடையும் பத்திரிகையாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதி தருவதற்கு ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.