fbpx
Others

கோபி அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் மீது வழக்கு..

கோபி அருகே உள்ள கெட் டிச்செவியூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளிக் கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக் கூடத்தில் வேதியியல் பாட ஆசிரியராக கோபியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீ முருகனிடம் புகார் தெரிவித்தனர் இதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஸ்ரீ முருகன் அளித்த புகாரி பேரில் கோபி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸர் போக்சோ சட்டத்தின் கீழ் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close