fbpx
Others

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உணர்வுபூர்வமாக பேசிவிடை பெற்றார்..

கடந்த 2022-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஜனாதிபதியால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியாகபதவியேற்றார். இவரது பணிக்காலம் நாளை மறுநாள் 10ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமைநீதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சிவ் கண்ணா நியமனம்செய்யப்பட்டு உள்ளார். இவர் வரும் 11ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.இந்நிலையில் இன்று சந்திரசூட்டின் கடைசி பணி நாளாகும். அவரது பணி ஓய்வு 10ம் தேதி என்றாலும், 9 மற்றும் 10 ம் தேதி நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், இன்றே ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிரியாவிடை அளித்தனர்.
அப்போது பேசிய நீதிபதிகள், உங்களது புன்னகையை மறக்க முடியாது. பொறுமையாக வழக்குகளை விசாரணைமேற்கொண்டுள்ளீர்கள். சுப்ரீம் கோர்ட்டில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்தீர்கள். இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கமாக இருந்தீர்கள். அம்பேத்கர் சிலையை சுப்ரீம்கோர்ட்டில் நிறுவியதற்கு நன்றிகள். என்றும் இளமையாக இருக்கும் உங்கள் ரகசியத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். உடல் ரீதியாக இனி நீங்கள் சுப்ரீம் கோர்ட்டில்இல்லை என்றாலும், நீங்கள் விசாரணை மேற்கொண்ட வழக்குகளும், வழங்கிய நூற்றுக்கணக்கான
தீர்ப்புகளும் காலத்திற்கும் நிலைத்திருக்கும். இனிவரும் தலைமுறையினருக்கு அது உறுதுணையாக இருக்கும் என்றனர்.தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், நான் இளம்  வக்கீலாகஇருந்தபோது,கோர்ட்டிற்குவந்துநீதிமன்றநடவடிக்கைகளை  உன்னிப்பாக கவனிப்பேன். எப்படி வாதாடுவது , நீதிமன்றத்தில் எப்படி நடந்து கொள்வது என பலவற்றை கற்றுக் கொண்டேன். வாழ்க்கையைப் பற்றி நீதிமன்றத்தில் நான் ஏராளமாககற்றுக்கொண்டேன். இந்த நீதிமன்றம்தான் தொடர்ந்து என்னை இயக்கிக்கொண்டிருந்தது.முந்தைய வழக்கைபோல புதிய வழக்கு ஒன்று வருவதில்லை, ஒவ்வொன்றும் புதியதாகவே இருக்கும் உங்கள் யாரையாவது நான் காயப்படுத்தி இருந்தாலோ, பாதித்திருந்தால்என்னைமன்னித்துவிடுங்கள்.ஏனென்றால் நான்எதையும்உள்நோக்கத்தோடுசெய்யவில்லை.உங்கள்அனைவருக்கும்நன்றி.நாளைமுதல்நான்தீர்ப்பளிக்கமுடியாது.ஆனால்பணிஓய்வுநாளில்  நிறைவாகஉணர்கிறேன்.நீதிபதிசஞ்சிவ்கண்ணாமிகவும்கண்ணியமானவர் என தனது இறுதி வேலை நாளில் பிரியாவிடை அளித்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உணர்வுபூர்வமாக பேசிவிடை பெற்றார்.

Related Articles

Back to top button
Close
Close